தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி


தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களோடு தொடர்பில் இருந்த 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக தொற்று உறுதியான 11 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 10 பேரில் 6 பேர் சென்னை கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மருத்துவமனையில் ஒருவர், கன்னியாகுமரி, திருவாரூர், தி.மலை, தலா ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 30 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 15 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Previous Post Next Post