நோயாளிகளை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் - தனியார் பேருந்து மீது மோதி கோர விபத்து - 2 பேர் பலி - 7 பேர் காயம்.!*


திண்டுக்கல், டிச.2-. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்சை பைலட் சங்கர்(34) ஓட்டி வந்தார்.  அவசரகால மருத்துவ உதவியாளர் சத்தியா (30) மற்றும் நோயாளிகள் பழனிச்சாமி (46) , நட்ராஜ் (48) மற்றும் இவர்களது உள்ளிட்ட 9 பேர் ஆம்புலன்சில் வந்து கொண்டிருந்தனர்.  


திண்டுக்கல் வேடசந்தூர் நான்குவழிச்சாலை விட்டல் நாயக்கன் பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னே சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின்புறம் 108 ஆம்புலன்ஸ் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதியது.  இதில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி பழனிச்சாமி (46) மற்றும் இவரது உறவினர் வீரக்குமார் (35 ) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஆம்புலன்சில் வந்த நோயாளி லெட்சுமி (44), நட்ராஜ்(48), இவரது மகள் பானுப்ரியா (23),  வேடசந்தூர் மருத்துவ பணியாளர் சுமதி(35), அட்டண்டர் முருகேசன் (50), பைலட் சங்கர் அவசரகால மருத்துவ உதவியாளர் சத்யா ஆகிய 7 பேர் படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post