கீழ் பவானி வாய்க்கால் அருகே சாராயம் காய்ச்சிய 1 பெண் உட்பட மூவர் கைது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பெரியூர், கீழ்பவானி வாய்க்கால் பகுதி, கன்னிமார்கோவில் அருகே உள்ள பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச் சாராயம் காட்ச்சப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் நெப்போலியன் தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு காட்டுப்பகுதியில் ஒரு பெண் உட்பட மூவர் சாராயம்   காய்ச்சி கொண்டிருந்தவர்களை, கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து விஷநெடியுள்ள 10 லிட்டர் சாராயம் மற்றும் சாராய காய்ச்சப்பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றியதுடன், சாராயம் காய்ச்ச பயன்படும் சுமார் 150 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.


சம்பந்தபட்ட உக்கரம் பெரியார் நகரைச்  சார்ந்த தங்கவேல் வயது 44,தங்கவேல் மனைவி வசந்தி, வயது 39 மற்றும் ஆறுமுகம் வயது 46 ஆகியோரை கைது செய்து, வழக்குபதிந்து, ரிமாண்ட் செய்தனர்.


தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக,

கி.நாராயணசாமி.

செய்தியாளர்,

சத்தியமங்கலம்.


Previous Post Next Post