தூத்துக்குடி மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் தொழிற் சங்க (SDTU) மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொது செயலாளர் ரகூப் நிஸ்தார் அவர்கள் தலைமையில் 8-11-2021 திங்கள் கிழமை காலை 11.00 மணி அளவில் SDPI மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொது செயலாளர் காதர் முகைதீன் கலந்து கொண்டார்கள்... இதில் புதிய மாவட்ட நிர்வாகம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
மாவட்ட தலைவராக சேக் அஷ்ரப் அலி பைஜி, (பேட்மா நகரம்) மாவட்ட துணை தலைவராக மாமுநைனா, (முத்தையாபுரம்) மாவட்ட செயலாளராக அபுபக்கர் சித்திக் (ஆறாம் பன்னை)
மாவட்ட பொருளாளராக குலசை தாஹிர் சுல்தான் (குலசேகரன் பட்டிணம்), மாவட்ட துணை செயலாளராக முஹைதீன் அப்துல் காதர் (காயல்பட்டிணம்),
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக செய்யது ஷேக்(ஆத்தூர்) மற்றும் அப்தூர் ரஹ்மான் (தூத்துக்குடி) தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது, கிளைகளை அதிகப்படுத்துவது மற்றும் நலத்திட்டங்களைப் பெற்றுத் தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இறுதியாக மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்திக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்...