நீதிமன்ற உத்தரவை மீறியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன், விவசாயியான இவரது நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டா வழங்க பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இதுகுறித்த உத்தரவு நாமக்கல் மாவட்ட ஆட்சியர், பரமத்தி வேலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் நீக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், ரசப்பன் மீண்டும் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
*

*ஆனால் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என யாரும் ஆஜராகவில்லை. எனவே நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.*

Previous Post Next Post