கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் மேல்நாரியப்பனுாரை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு RC பள்ளி ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இது குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். அதையொட்டி சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் நிர்மல்பிரேம்குமார் மற்றும் லாரன்ஸ் ஆகிய இரண்டு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக கலா வாதாடினார். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 30,000 ரூபாய் அபாரதமும்,
ஆசிரியர் லாரன்ஸ்க்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் தீர்ப்பு வழங்கினார். அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது