முதுகுளத்தூரில் பேரூராட்சி ஊழியர் இரும்பு கம்பியால் நாயை அடித்துக் கொன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல்.!


முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் நாயை பேரூராட்சி ஊழியரே  இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பரமக்குடி செல்லும் சாலை ஓரம் ஒரு வீட்டின் முன்பாக  நாய் ஒன்றை முதுகுளத்தூர் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்  இரும்புக் கம்பியால் பலமாக தாக்கியுள்ளார். அந்த நாயானது இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதற்கு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக  சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி விலங்கின ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதியை  தொடர்பு கொண்டு கேட்டபோது ஊழியர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Previous Post Next Post