தமிழகத்தில் கனமழை, அரபிக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


ரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா - வடக்கு கேரளா கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்.

இதுதவிர, வங்கக் கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் எனவும், 18-ந் தேதி வாக்கில் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகம் கடலோர பகுதியை நெருங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அரபிக் கடல், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

Previous Post Next Post