தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலை பணிகள் மற்றும் சாமுவேல்புரம், திரேஸ்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம் மேட்டுப்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் திரேஸ்புரம் பகுதி செயலாளர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.