கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல கிராமங்களில் தண்ணீர் தேங்கியும் வீடுகள் இடிந்து விழுந்தும் நிலையில் பொதுமக்கள் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்
இந்நிலையில் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட ஆலத்தூர் ,சித்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொழிலாளார் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் உத்தரவின் பேரில் மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறிகள் ,போர்வை மற்றும் நிதி உதவி வழங்கி வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் வழங்குவதாகத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மாபொடையூர் கிராமத்தில் அரசு நியாயவிலைக் கடையின் மேற்கூரையில் இருந்து ஏற்படும் கசிவுகளையும் பொடையூர் கிராமத்திலிருந்து விநாயகாந்தல் செல்லும் சாலையை சூழ்ந்துள்ள மழைநீர் களையும் ஆய்வு செய்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
உடன் மங்களூர் பிடிஓ சண்முகசிகமணி, மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட பிரதிநிதி திரு குமணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் திருவள்ளுவன் ,ஆலம்பாடி கவுன்சிலர் சங்கர் ,ஆவட்டி கவுன்சிலர் சிவமாலை சாமிதுரை ,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஆலத்தூர் சதீஷ், கிளைச் செயலாளர் வேலுசாமி, சின்னதுரை ,ராஜசேகர், மா பொடையூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் மற்றும் கட்சியினர் உட்பட பலர் இருந்தார்கள்.