தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை - மாவட்டம் முழுவதும் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் - மக்கள் அவதி.!


மழையால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவி - கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின்  காரணமாக, மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது.

கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் இதனால் வாகன ஓட்டிகள் பெருதும் சிரமத்துக்கு உள்ளாகினர். மாவட்டம் முழுவதும் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது இந்நிலையில், பாதுகாப்பு பணிகளை முடுக்கி விடவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் விதமாகவும், தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூர் பகுதி, தண்ணீர் பந்தல், புறையூர், கீழகல்லாம்பாறை, கடம்பாகுளம் மதகு, அங்கமங்கலம் உள்ளிட்ட மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகள்









நாககன்னிகாபுரம் பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு, நிதியுதவி வழங்கி தொடர்ந்து திருச்செந்தூர் அதன் சுற்று வட்டார பகுதியான காயல்பட்டினத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் பல்நோக்கு புகலிட மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் 

தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் உள்ள செட்டியார் மஹால், நிலா மஹால், தங்கம்மாள் பள்ளி மற்றும் டூவிபுரம் மாநகராட்சி மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய், பெட்சீட் மற்றும் 

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்  வழங்கினார்

ஆய்வின் போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன்,ஒன்றிய செயலாளர் நவீன்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பலர்  உடனிருந்தனர்.

Previous Post Next Post