மாவட்ட தடகள போட்டிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருப்பூர் பிரிவு சாம்பியன்; ஐ வின் ட்ராக் கிளப், ஹோப் ஸ்டார் இரண்டாமிடம்

திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் *வது ஆண்டு திருப்பூர் மாவட்ட இளையோர் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கான தடகளப்போட்டிகள் டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற்றன. 

இதில் மொத்தம் 87 போட்டிகள் நடத்தப்பட்டன. 650 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தொடர்ச்சியாக இந்த போட்டிகள் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்திலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டரங்க வளாகத்திலும் நடைபெற்றன. நடுவர்கள் முன்னின்று போட்டிகளை நடத்தினர்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் தடகள சங்க தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் இணைச் செயலாளருமான ஆர். பி.ஆர்..சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சிக்கண்ணா கல்லூரியின் முதல்வர் டாக்டர்.கிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எம்.முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். சிக்கண்ணா கல்லூரியின் துணை முதல்வர் விநாயகமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் டாக்டர்.ராஜாராம், நிட்சிட்டி ரோட்டரி கிளப்பின் மாவட்ட தலைவர் ஸ்ரீதர், காவல் ஆய்வாளர் முத்துக்குமார், ரோட்டரி கிளப் உறுப்பினர் பொன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரையுடன், வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழுடன் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒவ்பொரு பிரிவிலும் சிறந்த தடகள வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

விபரம் பின்வருமாறு: 

14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில்* இடுவம்பாளையம் அரசு பள்ளி மாணவர் யுகேஷ் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இதே பிரிவின் மாணவியர் பிரிவில் ஜெய்வாபாய் பள்ளி மாணவி ராகவர்த்தினி சிறந்த வீராங்கனையாக தேர்வுபெற்றார்.

16 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் பிளாட்டோஸ் பள்ளி மாணவர் பிரியான்ஸ் ராஜ் மற்றும் ஐ வின் ட்ராக் அகாடமியின் விஷ்ணு ஸ்ரீ ஆகிய இருவரும் சமமான புள்ளி பெற்று சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதே பிரிவின் மாணவியர் பிரிவில் செயிண்ட் ஜோசப் பள்ளி மாணவி பவீனா சிறந்த வீராங்கனையாக தேர்வுபெற்றார்.

18 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் ஐ வின் ட்ராக் அகாடமி மாணவர் ஸ்ரீனேஷ் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இதே பிரிவின் மாணவியர் பிரிவில் கொங்கு கல்லூரியின் மாணவி வைஷாலி சிறந்த வீராங்கனையாக தேர்வுபெற்றார்.

20 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் லயோலா கல்லூரி மாணவர் சூர்ய பிரகாஷ் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இதே பிரிவின் மாணவியர் பிரிவில் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் மாணவி ஏஞ்சல் சில்வியா சிறந்த வீராங்கனையாக தேர்வுபெற்றார்.

தேர்வுபெற்ற அனைவருக்கும் தனிநபர் சாம்பியன் கோப்பையுடன், காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எழுதிய "உனக்குள் ஒரு தலைவர்" எனும் தன்னம்பிக்கை நூல் பரிசளிக்கப்பட்டது.

மாணவர்கள் ,மாணவியர்கள் பிரிவின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருப்பூர் பிரிவு வீரர், வீராங்கனைகள் பெற்றனர். சிறப்பாக பயிற்சியளித்த திருப்பூர் மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்ய நாகேஸ்வரி அவர்களுக்கு பாராட்டும், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையும்* வழங்கப்பட்டது. இரண்டாமிடத்தை மாணவர்கள் பிரிவில் ஐ


வின் ட்ராக் கிளப்பும், மாணவியர்கள் பிரிவில் இரண்டாமிடத்தை ஹோப் ஸ்டார் கிளப்பும் வென்றன. இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற வீரர், வீராங்கனைகள் டிசம்பர் 2 முதல் 5ம் தேதிவரை திண்டுக்கல் மாவட்டம், என். பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் 35வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் சேம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

சிறந்த முறையில் திட்டமிட்டு, போட்டிகளை நடத்த உதவிபுரிந்த தடகள சங்கத்தின் இணைச் செயலாளர் .பாலகிருஷ்ணன், உடுமலை அரசு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் செந்தூர் மனோகர், ஐ வின் ட்ராக் கிளப்பின் தலைமைப் பயிற்சியாளர் .அழகேசன், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் .ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு திருப்பூர் தடகள சங்க தலைவர் .சண்முகசுந்தரம் பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.

Previous Post Next Post