தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு
இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா பாதிப்பானது குறைய தொடங்கியிருப்பதால் முழுமையாக நேரடி தேர்வு முறை நடத்தப்படும் என்றும் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் இதே முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. நேரடி தேர்வானது அரசு வெளியிட்டிருக்கக்கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை வெளியிட்டிருக்கக்கூடிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.