தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம்.!


தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கனித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கனித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஜாய்சன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட துணை நிர்வாகிகள் சதீஷ், செல்வின், யுவராஜ், ரோஷன், ப்ரியா உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Previous Post Next Post