அரசியல் சாசன நாள் விழா - பிரதமர் மோடி பேச்சு


அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வழங்கி உள்ள நாடாக திகழ்கிறோம். சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.பல பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசிலமைப்பு உதவியது.

சுதந்திரத்திற்கு பிறகும் பல ஆண்டுகாலமாக ஒரு பெரிய பகுதி மக்களின் வீடுகளில் கழிவறைகள், மின்சாரம் தண்ணீர் வசதிகள் கூட இல்லாத கோடிக்கணக்கான மக்கள் தவித்து வந்தனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற மற்ற நாடுகள் நம்மை காட்டிலும் முன்னேறி உள்ளன. நாம் இன்னும் இலக்கை அடைய வேண்டும்.

பல நூறு ஆண்டுகள் இந்தியா வறுமை, பட்டினி,மற்றும் நோய்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுவந்துள்ளது. அந்த நிலையில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் சாசன அமைப்பு எங்களுக்கு உதவி உள்ளது.அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை எளிதாக்குவது - அரசியலமைப்பின் உண்மையான மரியாதை என்று நான் கருதுகிறேன்.

சுதந்திரத்திற்காக வாழ்ந்து மறைந்த மக்கள் கண்ட கனவுகளின் வெளிச்சத்திலும்,பழமையான இந்தியாவின் பாரம்பரியத்தை போற்றி நமது அரசியல் சாசனத்தை உருவாக்கி நமக்கு அரசியலமைப்பை வழங்கியுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Previous Post Next Post