தூத்துக்குடி மாநகராட்சி குட்பட்ட ராஜீவ் நகர்.பால்பாண்டிநகர்.அன்னைதெரசாநகர்.SPMநகர். ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சுகாதார அலுவலர் அரிகணேசன் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு கடைபிடிக்க வேண்டிய முன் னெச்சரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசி சில அறிவுரைகளையும் வழங்கினார். டெங்கு களப்பணியாளர்கள் மூலம் மழைநீர் தேங்கக் கூடிய பொருட்கள் அனைத்தும் தெருக்களில் அகற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் , சுகாதார அலுவலர் அரிகணேசன் மற்றும் இப்பணிகளில் ஈடுபட்ட களப் பணியாளர்களுக்கும் இந்திய ஜனநாயக சங்கம் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கப்பட்டது