தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி.!


தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் பொன் முனியசாமி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொன் இசக்கி (வயது 30). தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

பொன் இசக்கி விமான நிலையத்தில் அவருடன் பணியாற்றிய ஒருவருக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணத்தை திருப்பி கேட்டபோது அந்த நபர், பொன் இசக்கியை மிரட்டினாராம்.


இது தொடர்பாக முறப்பநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் ஜாமினில் வெளியே  வந்த அவர் மீண்டும் பொன் இசக்கியை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் மனம் உடைந்த பொன் இசக்கி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தனது குழந்தை மற்றும் தாயுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை திடீரென ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  தண்ணீரை ஊற்றி பொன் இசக்கி மீட்டு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post Next Post