சென்னையில்நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுக எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றியும்,
மாவட்டச் செயலாளர்கள் எப்படி இந்த தேர்தலில் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட இருக்கின்றன. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு எந்த அடிப்படையில் செய்ய வேண்டும். அவர்களுடன் எவ்வாறாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பேச்சுவார்த்தை குழு அமைப்பு, உள்ளிட்டவை குறித்தும் முக்கிய ஆலோசனை செய்யப்படுகிறது.
மேலும், பெட்ரோல் டீசல் மீதான விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, போராட்டத்தை அதிமுக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானமும், பொங்கல் பரிசுடன் 2000 ரூபாய் நிதியை தமிழக அரசு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானமும் நிறைவேற்றபட உள்ளது.