தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் பழைய கொலை குற்றாவாளிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தீபாவளியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தபடுவது குறித்தும்,
தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை மற்றும் அரசால் அறிவிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள்,
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகன வேகப்பந்தயம் வைத்து செல்லுதல் (Bike Race), மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பல அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் ஹர்ஷ் சிங், தூத்துக்குடி ஊரகம் சந்தீஸ்,
காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி உதயசுசூரியன், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சாத்தான்குளம் கண்ணன், விளாத்திக்குளம் பிரகாஷ்,
மதுவிலக்கு அமலாக்க பிரிவு பாலாஜி, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ் குமார், செல்வி. ஷாமளா, பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.