நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கழக செயல்வீரர் ஆலோசனை கூட்டம் - கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்பு.!


வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், ஆத்தூர் பகுதியில்,   கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்து பேசினார்.


நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா,  மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி‌ சங்கர், ஒன்றிய செயலாளர் நவீன்குமார், 

பேரூர் செயலாளர் முருகப்பெருமாள், பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி‌, ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம் மற்றும் அணி அமைப்பாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post