உக்கரம் அருகேயுள்ள வண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு பை வலுப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், வழிகாட்டு தலைமையாசிரியர் கனக ராஜன், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ் சி நடராஜ் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினர்.
உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், துணைத் தலைவர் புஷ்பா, ஒன்றிய குழு உறுப்பினர் சரோஜா, வார்டு உறுப்பினர் பொன்னி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா, பள்ளியின் தலைமையாசிரியர் ஆறுமுகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், இப்பள்ளியில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர்
நாராயணசாமி.
சத்தியமங்கலம்.