தாமிரபரணி ஆற்றில் தற்போது வரும் 2500 கன அடி நீர் நாளை 15000 கன அடி நீராக பெருவெள்ளம் ஏற்பட உள்ளதால் தூத்துக்குடி ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை - ஆட்சியர்/காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் தற்போது வரும் 2500 கன அடி நீர் நாளை 15000 கன அடி நீராக பெருவெள்ளம் ஏற்பட உள்ளது. - ஆகவே தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு, நீந்துவதற்கு, மீன்பிடிப்பதற்கு என எந்த வேலைகளுக்கும் ஆற்றங்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
பொதுமக்கள் யாரும் ஆற்றங்கரை மற்றும் நீர் நிலைகள் பக்கம் செல்லவேண்டாம் என மாவட்ட ஆட்சியர்/மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பெருவெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு - பாபநாசம் நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த தண்ணீரானது மணிமுத்தாறு மற்றும் கடனா நதி நீருடன் கலந்து நாளை காலை தூத்துக்குடி மாவட்டம் மருதூரில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு மருதூர், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் முக்காணி வழியாக கடலில் கலக்கிறது. தற்போது இன்றைக்கு (13.11.2021) 2500 கன அடியில் சென்று கொண்டிருக்கும் நீரானது நாளை 15000 கன அடியில் பெரு வெள்ளமாக கடுமையான வேகத்தில் செல்ல உள்ளது.
ஆகவே பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கோ, நீந்துவதற்கோ, மீன்பிடிப்பதற்கோ அல்லது வேறு எந்த வேலைகளுக்கோ அல்லது நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொழுது போக்கிற்காகவோ கூட ஆற்றங்கரை பக்கம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,
ஆகவே பொதுமக்கள் யாரும் ஆற்றங்கரை பக்கம் செல்ல வேண்டாம் என பெருவெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் தற்போதுள்ள வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எச்சரிக்கையுடன் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும், பொதுமக்களின் அவசர உதவிக்காக
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 95141 44100, 0461-2340393, 0461-2341248 ஆகிய அலைபேசி மற்றும் தொலை பேசி எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்/மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.