தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ரவீணா.(வயது 7 )எடுஸ்டார் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அவள் தனது 4.5 வயது முதல் யோகா மற்றும் ஸ்கேட்டிங் கற்று வருகிறார்.
இவர் தான் கற்று கொண்ட யோகா வில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு இருக்கிறார். இவர் மேலும் மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பல யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்ற கொடிய நோயிடம் இருந்து நம்மை காக்க கூடிய முதல் மாமருந்து யோகா மற்றும் மூச்சு பயிற்சி தான் என்பதை பல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு எடுத்து உரைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.
இதுவரை இச்சிறுமி கண்ணாடி,மண்பானை, செங்கல் போன்ற வற்றில் பல யோகா ஆசனங்கள் செய்து உள்ளார். இதுவரைக்கும் அவர் யோகா வில் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.கடந்த ஜூன் மாதம் நடந்த உலக யோகா தினத்தில் 75 ஆசனங்கள் 10 நிமிடங்களில் செய்து எல்லோரையும் அசத்தி உள்ளார்.
இவர் மேலும் ஓவியம் மற்றும் ஸ்கேட்டிங் பயின்று வருகின்றார்.
அதில் ஒரு நிகழ்வாக 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்தி காலில் ஸ்கேட்டிங் மாட்டி கொண்டு கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து உலக சாதனை நிகழ்த்தினார்.
இந்த சாதனையை அங்கிகரித்து யுனிவர்சல் புக் ஆஃப் ரேக்காட்ஸ் சிறுமியை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கியது. இந்த சான்றிதழை சபா நாயகர் அப்பாவு சிறுமிக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் நிறுவனத் தலைவர் யோகா சுரேஷ், மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.