கரூரில் பள்ளி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீஸ் கைது செய்தனர்.
பள்ளி மாணவி ஒருவர் தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவியின் தாய் புகார் அளித்தார். புகாரின்பேரில் டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய இருவர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் இரு பிரிவுகளின் கீழ் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் அவர்களை பிடிக்க தனிப்படையையும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.