கோவை மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கனி மொழி MP கூறியுள்ளதாவது,
"ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறியுள்ளார்