திருநெல்வேலி மாநகராட்சியின் பழுதான சாலைகள் - விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவாதம்.!


திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன்- பேட்டை சாலை, குற்றாலம்  சாலை,நைனார் குளம் சாலை,எஸ்என் ஹை ரோடு, சிவசக்தி சாலை என மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் என்ற பெயரில் சாலைகள் குண்டும் குழியுமாக தொண்டி முழுவதுமாக சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தக்காரர்கள் முடிக்காமல் விட்டு விட்டார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் சாலையில் சேரும் சகதியுமாக மாறி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.


இதையடுத்து இன்று 15/11/21 திருநெல்வேலி மாநகர பகுதியை சார்ந்த பொதுமக்களும் எஸ்என் ஹை ரோடு இரும்பு வியாபாரிகள் சங்கமும் இணைந்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில் மழைக்காலம் முடிந்தவுடன் முழுவீச்சில் சாலை பணிகளை துவங்க வேண்டும் என்றும், அவ்வாறு தொடங்குவதற்கு முன்பே ஏதேனும் குழாய்கள் பதிப்பது போன்ற முதற்கட்ட பணிகள் நடைபெற வேண்டிய அவசியம் இருந்தால் அவை முடித்து வைக்கப்பட வேண்டும் என்றும் சாலைகள் அமைத்த பின்பு அதனை ஒப்பந்தக்காரர்கள் ஏதேனும் காரணம் கூறி உடைத்து பொதுமக்களுக்கு மீண்டும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டனர்.

மனுவினை பெற்றுக் கொண்ட மாநகராட்சி உதவி ஆணையர் திரு.வெங்கட்ராமன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் S.N.ஹை ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் S.S.S.நாதன்,செயலாளர் சிலுவை பிச்சை,செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர் திருமதி. ராதா, Er.சாலமன்,ஆஷிக் மற்றும் திருநெல்வேலி டவுண், பேட்டை பகுதிகளை சார்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் பிரச்சினைகளை மாநகராட்சி துணை ஆணையரிடம் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் எடுத்துரைத்தார்.

Previous Post Next Post