ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை அனுப்பும் இந்தியா வாகா-அட்டாரி எல்லையில் உள்ள ஜீரோ பாயின்ட்டில் கோதுமையை இறக்கி மீண்டும் ஏற்ற வேண்டும் என்பதால் "இந்திய லாரிகளை அனுமதிக்க வேண்டும்" என்ற இந்தியாவின்
கோரிக்கைக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தரைவழியாக ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை அனுப்புவதற்காக இந்தியா பாகிஸ்தானை அணுகிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள தலிபான் தூதுக்குழுவிடம், ஆப்கன் சகோதரர்களின் போக்குவரத்துக்கான கோரிக்கையை தனது நாடு சாதகமாக பரிசீலிக்கும் என்று கூறினார்.
விதிவிலக்கு அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினரர்.
குளிர்காலம் நெருங்கி வருவதால் ஆப்கானிஸ்தானில் அவசரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து முறைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் “தற்போதைய சூழலில், மனிதாபிமான நோக்கங்களுக்காக விதிவிலக்கான அடிப்படையிலும், வகுக்கப்பட வேண்டிய முறைகளின்படியும் இந்தியா வழங்கும் கோதுமையை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்வதற்கான ஆப்கான் சகோதரர்களின் கோரிக்கையை பாகிஸ்தான் சாதகமாக பரிசீலிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பிரதமர் கான் மற்றும் நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் மற்றும் தூதுக்குழுவின் மூத்த உறுப்பினர்களை ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி சந்தித்து பேசிய பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நாடு எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை சமாளிக்க ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தானின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரதமர் கான் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல அனுமதிப்பதற்காக இந்தியா அக்டோபர் முதல் வாரத்தில் பாகிஸ்தானுக்கு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியது. அது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சாதகமான முடிவு எட்டப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே சீனா, துருக்கி போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானிற்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க துவங்கிவிட்டன. ஆப்கானிஸ்தான் மக்களிடையே அதிக நன்மதிப்பைக் கொண்ட இந்தியாவும் தனது பங்கைச் செய்ய விரும்புகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லும் பணிக்கு பாகிஸ்தான் வழியாக 5,000 டிரக்குகளை அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லமாபாத் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் அணுகுகிறது. ஆனால் கூறப்பட்டுள்ள ட்ரக்குகளின் அளவு மற்றும் சாலைகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.
டெல்லியில், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குறித்து பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளின் (சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர்த்து) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து சாதகமாக கூறினார் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித். அதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானது.