தூத்துக்குடி மாவட்டத்திற்கு கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்காரம் நடைபெறும் வருகிற 9-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அதற்குப்பதிலாக வருகிற 27ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேற்படி நாளில் திருக்கோவிலில் நடைபெறும் அனைத்து வித நிகழச்சிகளிலும்
பொதுமக்கள் கலந்து கொள்ள தடை இருக்கின்ற காரணத்தால் உள்ளுர் தொலைக்காட்சிகள் மூலம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் தத்தம் வீடுகளில் இருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.