இந்நிலையில், நேற்று மாலை 6 அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் என்ற பில்லா ஜெகன் (44) மற்றும் 6 பேர் மது அருந்த அறை ஒதுக்குமாறு, காவலாளி சதாம் செட்டிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் அறை தர முடியாது இங்கு ஸ்டெரலைட் வழக்கு சம்பந்தமாக ஒரு நபர் ஆணையம் நீதிமன்றம் உள்ளதால் உங்களுக்கு தர இயலாது வெளியே செல்ல வேண்டும் என்று கூற ஆத்திரம் அடைந்த பில்லா ஜெகன் சதாம் செட்டின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும் அருகில் இருந்த நபர் சதாம் செட்டினை அடித்து உதைத்து கீழே கிடந்த கல்லை கொண்டு அவரது தலையில் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சதாம் செட் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பில்லா ஜெகன் உட்பட 6பேர் மீது 152, 147, 148, 452, 294 பி, 332, 324, 506(2), 510 ஆகிய பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் பில்லா ஜெகன், அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. சுபாஷ் பண்ணையார் ஆதரவாளார்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அளித்த புகாரின் பேரில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டு வருகிறது.
மேலும் தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.