தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக உலக நீரிழிவு தின அனுசரிப்பு நிகழ்வை முன்னிட்டு, மருத்துவமனை வளாகத்தில் நீரிழிவு மற்றும் அவை சார்ந்த விழித்திரை அழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவ துறை இயக்குனர் பெர்னார்டு ஆல்பர்ட் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்திய அரசின் AICTEன் நீதிபதியும், டெல்லியிலுள்ள தேசிய லோக் அதாலத் நீதிமன்றத்தின் உறுப்பினருமான டாக்டர் ராமசாமி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் பெர்னார்டு கூறுகையில், பார்வை நிலை மோசமடைவதைத் தடுக்க நீங்கள் முனேச்சரிக்கையாக இருக்க வேண்டும் முதலில் உங்கள் சர்க்கரை இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துங்கள் என கூறிய அவர் உணவு கட்டுப்பாடு , ஆரோக்கியமான எடையை வைத்திருத்தல் வேண்டும் என கூறினார்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இது சம்பந்தமாக அனைத்து மருத்துவமனைகளிலும் விழுப்புணர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் 50வயதிற்கும் மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக நடைபெறுகிறது. அதன் படி தமிழக அரசு சார்பாக மக்களை தேடி மருத்துவம் மூலம்
மக்கள் மத்தியில் சர்க்கரை நோய் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தி மக்களை சென்றடைய ஏற்பாடு செய்யபட்டு இருக்கிறது. மக்கள் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.