'அந்த வாட்ச் 5 கோடி இல்லீங்க, ரூ.1.5 கோடிதான்' - ஹர்திக் பாண்ட்யா விளக்கம்


சுங்கத்துறை தன்னிடம் ரூ. 5 கோடி மதிப்பிலான வாட்ச்சுகளை பறிமுதல் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா

தன்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரேயொரு வாட்ச் மட்டுமே இருந்ததாக விளக்கமளித்துள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடமிருந்து சுங்கத் துறை அதிகாரிகள் ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு வாட்சுகளைப் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், ''நான் துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். என்னிடமிருந்து இரண்டு கைக்கடிக்காரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. தோராயமாக ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு வாட்ச் மட்டுமே என்னிடம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தவறானது. நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டை செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் வரியை செலுத்துவதை நான் ஏற்கனவே உறுதி செய்துள்ளேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் ஏதோ ஏமாற்றும் நோக்கில் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post