உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சேலம் வாசன் கண் மருத்துவமனையின் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாரத்தான் போட்டியை காவல்துறை துணைத்தலைவர் சி. மகேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் துவக்கி வைத்தார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக அளவில் சர்க்கரை நோய் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சர்க்கரை நோய் பற்றிய முழு விவரம் தெரியாமல் உள்ளது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது எனவும் மேலும் பொதுமக்கள் சர்க்கரை நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை நாடி நலம் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வாசன் ஐ கேர் மருத்துவமனையின் சேர்மன் மீரா அருண், துணை சேர்மன் சுந்தரம் முருகேசன், பொது மேலாளர் ஷாம் கே சுந்தர், சேலம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சத்தியமூர்த்தி, காவல்துறை அதிகாரிகள் மாணவ மாணவிகள் உள்ளிட்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவு மாரத்தான் போட்டியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாரத்தான் நிகழ்ச்சி காந்தி ஸ்டேடியம் முதல் 4ரோடு ராமகிருஷ்ணா சாலை வழியாக அஸ்தம்பட்டி வழியே மீண்டும் காந்தி ஸ்டேடியம் வந்தடைந்தது.