தூத்துக்குடி பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 2 பேர் கைது.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின்பேரில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளிநாயகபுரம்  பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கண்ணன் (எ) வள்ளியூரான் கண்ணன் (36) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி கண்ணன் (எ) வள்ளியூரான் கண்ணன் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கு உட்பட 2 வழக்குகளும், 

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது 

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் கோமேஸ்புரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தாளமுத்துநகர் சிலுவைபட்டி பகுதியை சேர்ந்த இருதயராஜா பாண்டியன் மகன் அலெக்ஸ் (எ) அருள்மணி (44) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி  அலெக்ஸ் (எ) அருள்மணி என்பவர் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post