நடுக்கடலில் மாயமான 2 மீனவர்கள் - குடும்பத்தினருக்கு மீன்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்.!*



தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் உள்ள கொம்புதுறையை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றபொழுது 2 மீனவர்கள் படகு கவிழ்ந்து பிளைவேந்திரன் என்ற மீனவர் மாயமான நிலையில் அவர்களது குடும்பத்தினரை மற்றும் 

நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தவரை மீட்ட மார்டின் என்ற மீனவரை திருச்செந்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தினரையும் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து இன்று ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் பகுதியில் உள்ள கொம்புதுறையை சேர்ந்த 2 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க நேற்றைய தினம் சென்றுள்ளார்கள். கடல் பகுதியில் அதிக அளவு பலத்த காற்று மற்றும் அலை வீசியதில் படகு கவிழ்ந்துள்ளது. அதில் இருந்த இரு மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளார்கள். 

தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை அப்பகுதியில் மற்றொரு படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மார்டின் என்ற மீனவரை காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். மற்றொரு மீனவரை கண்டுபிடிக்க முடியாமல் தேடி வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறையின் மூலமும் கடலோர காவல் படையினர் மூலமாகவும், தேடி கண்டுபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாயமான மீனவரை எந்தவகையிலாவது காப்பாற்ற வேண்டும் என்ற முறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாயமான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், அதுபோல சிகிச்சை பெற்று வரும் மீனவரின் குடும்பத்திற்கு ரூ.50000-ம் வழங்கி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை 

உதவி இயக்குநர் மீன்வளத்துறை விஜயராகவன், திருச்செந்தூர் கோட்டாச்சியர் கோகிலா, வட்டாச்சியர் சங்கரன், மீன்வளத்துறை ஆய்வாளர் ஜெகன், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் முத்துமுகம்மது, எஸ்.ஐ.காதர், சுகு, ராமஜெயம், செங்குளிரமேஷ், வால்சுடலை, குளோரன்ஸ், ஸ்ரீதர்ரெட்ரிக்கோ மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

Previous Post Next Post