நவம்பர் 18ல் சென்னையில் அதி கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னைக்கு நவம்பர் 18ம் தேதி வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, அரியலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் நாளை கனமழை பெய்யக்கூடும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 18ல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடையும். நவம்பர் 18ல் ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா -வட தமிழக கரை நோக்கி நகரும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post