தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை 168 பேர் மீது குண்டாஸ் - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நடவடிக்கை.!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரகிரி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31) என்பவரை கடந்த 20.10.2021 அன்று முன்விரோதம் காரணமாக சோழபுரம் பகுதியை சேர்ந்த 

கண்ணன் மகன் ஆனந்தராஜ் (23) என்பவர் கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான ஆனந்தராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது அவர்களும்,

கடந்த 18.10.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு திருமண மஹால் முன்பு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் முத்தையாபுரம் சுபாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜிலிங்கம் மகன் சங்கரேஸ்வரன் (எ) எலி (24) என்பவர் 

மதுபோதையில் அந்த நபரிடம் தவறாக


பேசி கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சங்கரேஸ்வரன் (எ) எலி என்பவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கின் எதிரியான சங்கரேஸ்வரன் (எ) எலி மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உட்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி எதிரி சங்கரேஸ்வரன் (எ) எலி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில் ராஜ்  சோழபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் 1) ஆனந்தராஜ் மற்றும் முத்தையாபுரம் சுபாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜிலிங்கம் மகன் 2) சங்கரேஸ்வரன் (எ) எலி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை 168 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Previous Post Next Post