தூத்தக்குடியில் குரூஸ்பர்னாந்து 152வது பிறந்த நாள் விழா - கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை.!


தூத்துக்குடி நகராட்சியாக இருந்த காலத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டுவந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சமுதாய மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கனிமொழி எம்.பி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். 

திமுக தேர்தல் அறிக்கையில் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு மணிமண்டபம் மற்றும் அரசு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் நகரின் மையப்பகுதியில்அவர்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில்  இன்று குரூஸ்பர்னாந்து 152வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் 

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், நிர்மலா

மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் சீனிவாசன், சுபேந்திரன், பாலகுருசாமி, ராமர், சேசையா, அகஸ்டின், 

பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி செயலாளர்கள் டேனி, முருகஇசக்கி, ஜெபக்கனி, துணைச்செயலாளர்கள் ராகேஷ், செல்வின், பால்மாரி, சங்கர நாரயணன், பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள் டென்சிங், ஹாட்லி, சுரேஷ், நாராயணன், மகேஸ்வரன் சிங், முன்னாள் கவுன்சிலர்கள் அந்தோணி ரெக்ஸ்ஸின் சூசை, செந்தில்குமார், ஜெயசிங், தொமுச மரியதாஸ், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post