142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை மகிழ்ச்சியில் ஐந்து மாவட்ட விவசாயிகள்.!


தேனி, தேக்கடி, நவம்பர் 30 -

தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நான்காவது முறையாக 142 அடியாக இன்று, எட்டியுள்ளது, இதனையடுத்து,

அணைக்கு இறுதி அபாய வெள்ள எச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்பட்டு,142 அடிக்கு மேல் வரும் தண்ணீரை கேரளாவிற்குள் திறந்து விடப்பட்டுள்ளது திறக்கப்பட்ட நீர் வண்டிப்பெரியாறு வழியாக இடுக்கி அணைக்குச் சென்று வருகிறது.  

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணை நீர்மட்டம் ஏற்கனவே கடந்த 2014, 2015, 2018 என மூன்று முறையும் தற்போது நான்காம் முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. கண்டு ஐந்து மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்ட செய்தியாளர், ரா.சிவபாலன்

Previous Post Next Post