தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் 12 ஊரக வளர்ச்சி ஒன்றிய பகுதிகளிலும் “100 மழைகால சிறப்பு முகாம்” நடைபெற இருக்கின்றன. இதற்கான மருத்துவ வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.செந்தில்ராஜ், இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.பொற்செழியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.