மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் -கேள்விக்குறியாகும் குரங்கிலிருந்து மனிதன் கோட்பாட்டு ஆய்வு


நியூயார்க்: முதல்முறையாக மனிதருக்கு மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளது குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற ஆய்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இருக்கும் நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பாக தொடர்ந்து சோதனை முயற்சிகள் நடந்து வந்தன. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற கோட்பாடுகளின்படி குரங்கின் இரத்தம், மற்றும் உறுப்புகள் மனிதனுக்கு பொருந்துமா என்று பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் குரங்குங்கும் மனிதனுக்கும் சம்பந்தமே இல்லை என்ற ஆய்வு முடிவுகளே வெளிப்பட்டன.





ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் பன்றியின் இரத்தம் மற்றும் பெரும்பாலான உறுப்புகள் மனித இனத்தோடு ஒத்துப் போனது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து மனிதனுக்கு பன்றியின் உறுப்புகள் மற்றும் இரத்தத்தை செலுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக மனித உடலுக்கு மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உறவினர்கள் அனுமதியுடன் அப்பெண்ணுக்கு பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் புதிதாக பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எவ்வித எதிர்ப்பையும் ஆற்றவில்லை எனவும் ராபர்ட் ஏ. மாண்ட்கோமெரி, எம்.டி., டி.ஃபில், லியோன் எச். பச்சர், எம்.டி., பேராசிரியர் மற்றும் NYU லாங்கோனில் அறுவை சிகிச்சை துறை தலைவர் மற்றும் NYU லாங்கோன் டிரான்ஸ்ப்லாண்ட் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் தெரிவித்துள்ளனர். 

பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் இந்த சோதனை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதால், மனித உறுப்புகளின் பற்றாக்குறையை போக்குவதற்கு உதவும் எனவும், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சிகளில்  மாற்றம் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post