காவல்துறையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி.!




1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். 

கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம்

கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத்தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்

நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 377. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கடந்த 01.09.2020 முதல் 31.08.2021 வரை வீர மரணமடைந்த காவல்துறையினர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலு, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 10 பேர்,  அருணாச்சல பிரேதேசத்தை சேர்ந்த உதவி ஆய்வார்  இகோப் டேட் மற்றும் 2 பேர், அஸ்ஸாமை சேர்ந்த ஏபி எஸ்.ஐ சுவபன் ராய் மற்றும் 6 பேர், 

பீகாரை சேர்ந்த ஆய்வாளர் அஸ்வினி குமார் மற்றும் 5 பேர், சட்டீஸ்கரை சேர்ந்த உதவி ஆய்வாளர் தீபக் பரத்வாஜ் மற்றும் 31 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஏ.எஸ். ஐ மோகன்சிங் மற்றும் 3 பேர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தலைமை காவலர் தேவேந்திர குமார் பண்டிட் மற்றும் 3 பேர், கர்நாடகாவை சேர்ந்த ஏ.ஏஸ்.ஐ மூர்த்தி மற்றும் 15 பேர், 

கேராளாவை சேர்ந்த எஸ்.சி.பி.ஒ ராஜாமணி மன்னன்சேரி மற்றும் ஒருவர், மத்தியபிரதேசத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்  சந்தன்லால் உய்கே மற்றும் 14 பேர், மணிப்பூரை சேர்ந்த தலைமை காவலர் சர்சேந்திரா சிங் மற்றும் 2 பேர், மேகாலயாவை சேர்ந்த காவலர் கிளிட்வெட் சுஷாய்ங், ஒடிசாவை சேர்ந்த தலைமை காவலர் சுனில்குமார் நாயக் மற்றும் 3 பேர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏ.எஸ.ஐ பகவத் சிங் மற்றும் ஒருவர், 

ராஜஸ்தானை சேர்ந்த காவலர் ஓங்கார் ராய்கா மற்றும் ஒருவர், உத்திரபிரதேசத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்  பிரசாந்த் யாதவ் மற்றும் 3 பேர், உத்திரகாண்டை சேர்ந்த தலைமை காவலர் மனோஜ்குமார் மற்றும் 2 பேர், மேற்கு வங்கத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் உஜ்ஜல் பரன் தாஸ் மற்றும் 16 பேர், 

அந்தமான் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த தலைமை காவலர் திரு. ராமகிருஷ்ணா மற்றும் ஒருவர், சண்டிகரை சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. சுக்பீர் சிங் மற்றும் ஒருவர், டெல்லியை சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. ராம்பால் மற்றும் 5 பேர், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆய்வாளர் திரு. பர்வேஸ் அகமது தார் மற்றும் 16 பேர், லடாக்கை சேர்ந்த தலைமை காவலர் திரு. குல்சார் அஹமது,  

அஸ்ஸாம் ரைபிள்ஸை சேர்ந்த வாரண்ட் அதிகாரி திரு. பீரேந்திர சிங் மற்றும் 2 பேர், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆய்வாளர் திரு. உமேத் சிங்  மற்றும் 46 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆய்வாளர் திரு. நாகேந்திர பிரசாத் மற்றும் 7பேர், மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த துணை படை தலைவர் திரு. விகாஸ்குமார் மற்றும் 81 பேர்,  

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த உதவி படை தலைவர் திரு. ரவீந்திர சிங் மற்றும் 53 பேர், என்.எஸ்.ஜி யை சேர்ந்த ரேஞ்சர் திரு. மகுல்கர் வைபவ் சுரேஷ், எஸ்;.எஸ்.பியைச் சேர்ந்த தலைமை காவலர் திரு. ராஜேஸ் மாட்டோ மற்றும் 4 பேர், எப்.எஸ், சி.டி மற்றும் எச்.ஜி   ஆகிய பிரிவை சேர்ந்;த எச்.ஜி திரு. அண்ணாமலை மற்றும் 2 பேர், 

என்.டி.ஆர்.எப் பிரிவை சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. நோன்தோம்பாம் பீனோய் மீட்டாய், ரயில்வே பாதுகாப்பு படைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. பூரண் சிங் நெகி மற்றும் 7 பேர் ஆகிய மேற்படி 377 காவல்துறையினர் ‘உனது வருங்காலத்தில் எனது தற்காலத்தை ஈந்தேன்” என்று கூறி வீர மரணம் அடைந்துள்ளார்கள்

இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், தூத்துக்கு ஊரக உட்கோட்டம் சந்தீஸ் இ.கா.ப, திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, ஸ்ரீவைகுண்டம்  வெங்கடேசன், சாத்தான்குளம்  கண்ணன், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி  உதயசூரியன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு  சம்பத், ஆயுதப்படை  கண்ணபிரான், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள்  கணேஷ்குமார், செல்வி. ஷாமளாதேவி மற்றும்  பவித்ரா, காவல் ஆய்வாளர்கள் ஆயுதப்படை  சுடலை முத்து, தூத்துக்குடி தென்பாகம் ஆனந்தராஜன்,  மத்திய பாகம்   ஜெயப்பிரகாஷ், வடபாகம் முருகன், முத்தையாபுரம் ஜெயசீலன், தாளமுத்துநகர் ஜெயந்தி, தெர்மல் நகர்  ராதிகா, போக்குவரத்துப்பிரிவு  மயிலேறும்பெருமாள் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் நங்கையர் மூர்த்தி உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post