தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு தமிழக மீனவ மக்கள் கட்சி கோரிக்கை!!

தமிழக மீனவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ச.பெர்டின் ராயன் தொடக்கப் பள்ளிகள் திறப்பை குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி இந்த வருடம் வரை பல்வேறு தரப்புகள் ஆக கொரோனா தடுப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு தற்போது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை முழுவீச்சில் நவம்பர் 1 முதல் திறக்கப்படும் என்று  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


அறிவித்துள்ளார்கள்.

இத்தகைய அறிவிப்பின்படி தொடக்கப் பள்ளிகளை முழு வீச்சில் திறக்க முற்படும்போது இளம் சிறார்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை பயன்படுத்தி கொடூர தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்களா என்பது பெறும் கேள்விக்குறியான விஷயம்.

கொரோனாவின் தொடக்க இடமான சீனா மற்றும் பள்ளிகளை முழுவீச்சில் துவங்கிய ஐரோப்பிய நாடுகளில் தற்போது தொற்று கடந்த மூன்று மாதங்களை விட மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய பேரரசின்(U.K) பிரதமர் அந்நாட்டில் உள்ள 12 முதல் 15 வயது  வரை நிறைவு பெற்ற குழந்தைகளை முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைத்திருப்பது நாம் அனைவரும் அறியப்பட வேண்டிய விஷயம்.

எனவே ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் அவர்களின் இரண்டு கட்ட தடுப்பு ஊசிகளை செலுத்தி இருந்தாலும் சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வேறு எந்த விதமாகவும் எளிதில் தொற்று பரவி அதனால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படக் கூடாது என்பது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக மீனவ மக்கள் கட்சியின் சார்பில் இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது.

கோரிக்கையை பரிசீலித்து நல்லதொரு முடிவை முதல்வர் எடுப்பார் என்பதை நாம் நம்புவோம்.

Previous Post Next Post