பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து பள்ளி பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து பள்ளி பேருந்துகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.செந்தில்ராஜ், நேரில் பார்வையிட்டு இன்று  ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பதால் அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி வாகனங்களையும் சோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுடன் வாகனங்களை சோதனை செய்து வருகிறோம். பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, மருத்துவ உபகரணங்கள், எமர்சென்சி விண்டோ, கொரோனா விழிப்புணர்வு தொடர்பான ஸ்டிக்கர், 

கொரோனா தொற்று என்பதால் மாஸ்க் ஆகியவை வாகனங்களில் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். அதுபோல வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வடகிழக்கு பருவமழையில் பள்ளி வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும், 

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களை பள்ளி வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து பள்ளி வாகனங்களும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்படும். பொது சாலையில் இயக்க தகுதிவாய்ந்த பள்ளி வாகனத்தினை பொது சாலையில் இயக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post