தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 80 வயது மூதாட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.!


ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாடகோவில் தெருவைச் சேர்ந்த பூல் என்பவரது மனைவி முத்தம்மாள் (80) என்பவர் இன்று சிவராமமங்கலம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் விறகு வெட்ட சென்றுள்ளார். அப்போது ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சதீஷ் உடனடியாக தீயணைப்பு துறையுடன் சேர்ந்து முத்தம்மாளை பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காவலர் சதீஷ் மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களை வெகுவாகப் பாராட்டினர்.

Previous Post Next Post