7 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை நடந்தது என்ன.!


கொலை உள்ளிட்ட 19 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் பிடிக்க முயன்ற போது போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டரில் சுட்டு கொல்லலப்பட்டார்.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி காமராஜ் நகசை  சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 8 மாவட்டங்களில் 7 கொலை வழக்கு, 21 வழிப்பறி, 6 திருட்டு உட்பட 35 வழக்குகள் உள்ளன. 2015 ஆண்டு முதல் அவர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும், தனது நண்பர் ரஜினி முருகன், உட்பட 7பேரை கடத்தி கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளார். 

கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் கோவளம் கடற்கரை  பகுதியில் பதுங்கியிருப்பதாக தனி படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனை அடுத்த தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா பிரபு தலைமையிலான போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த துரைமுருகன் உள்ளிட்ட 3 பேர் காவலர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. 

அந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் ராஜா பிரபு மற்றும் காவலர் டேவிட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காவலர்கள் தங்களை தாக்கிய துரைமுருகன் கும்பல் மீது தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தினர். 

அப்போது துரைமுருகன் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி குண்டு பட்டு இறந்துள்ளார். அவருடன்  இருந்த மற்ற 2 பேரும் தப்பித்து சென்றுள்ளனர். 

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயம் அடைந்த காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post