முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 260 புற்று நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை - அரசு மருத்துவர்களை பாராட்டினார் கனிமொழி எம்.பி


தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பிங்க்டோபர் - மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது . 

இதையொட்டி  மார்பக புற்றுநோய் சிகிச்சை பெற்று நலமாக வாழும் நோயாளிகள் உடன் கலந்துரையாடும் தினம் இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் விழா கொண்டாடப்பட்டது. 





நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு கதிரியக்க சிகிச்சை துறையின் அனைத்து உறுப்பினர்களையும் லீனியர் அக்சலரேட்டரின் முதல் ஆண்டு விழா மற்றும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 260 க்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு பாராட்டினார். 

பின்னர், நீண்ட கால மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர் கலந்துரையாடினார். கதிரியக்க சிகிச்சை துறையால் நடத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் - TAN11 திட்டம் - மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை மூலம் பயனடைய பொது மக்களை ஊக்குவித்தார்.

கதிரியக்க புற்றுநோய் நிபுணர் டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆர்எம்ஓ, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவின் தலைவர் பேராசிரியை டாக்டர் லலிதா சுப்ரமணியன் ஆகியோரின் பணிகளைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துறை மருத்துவர் லலிதா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post