ஒன்னரை கோடிப்பே... ஆமாப்பே....!* கனிமொழி MP திறந்து வைத்த தகர ஷீட்டு, ஸ்டீல் ராடுக்கு 1.54 கோடி செலவா?..காயத்ரி ரகுராம் கேள்வி.!


தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக எம்பி கனிமொழியால் திறக்கப்பட்ட தகர ஷீட்டு, ஸ்டீல் ராடு பேருந்து நிறுத்திற்கு ரூ 1.54 கோடி செலவா என பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் (2019-2020) ஆம் ஆண்டு எம்பி நிதியை கொண்டு ஒரு பேருந்து நிழற்குடையை கடந்த 5 ஆம் தேதி கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்ட அந்த நவீன பேருந்து நிழற்குடை சுமார் 1.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகும். இதுகுறித்த கல்வெட்டு அந்த பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டையும் பேருந்து நிறுத்தத்தையும் புகைப்படம் எடுத்து போட்ட பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம், எம்பி கனிமொழிக்கு ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டை கனிமொழிக்கு டேக் செய்து பதிவிட்ட நிலையில், இந்த பேருந்து நிழற்குடைக்கு ரூ 1.54 கோடி செலவா என கேட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் கனிமொழி MP யிடம் சரமாரி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

4 பெட்ரூம் உள்ள ஒரு பிளாட் வாங்கினாலே ஒரு கோடி தாண்டாது. இந்த தகர ஷீட்டுக்கும் ஸ்டீல் ராடுக்கும் 1.54 கோடியா என நெட்டிசன்கள் சரமாரி கேள்வி கேட்டு கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை வறுத்தடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post