தூத்துக்குடி மண்ணை நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி மத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ் தலைமையில் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ்
தூத்துக்குடியில் மண்ணை நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது பதவியேற்றுள்ள திமுக அரசு தேர்தல் பரப்புரையில் கூறியதுபோல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'விடியல் ஆட்சி' எனும் தலைப்பில்
தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்து அதைப்போல நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இருந்து அகற்றுவதற்கு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தற்பொழுது வரை வாய் திறக்காதது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் முன்பாக சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்றார்.