கவர்னர் அழைப்பு :பிரிவு உபசார விழாவை புறக்கணித்த பத்திரிகையாளர்கள் - நாகாலாந்து மக்களுக்கு அவமதிப்பு, 'இரட்டை வேடம்' என குற்றசாட்டு


தமிழ்நாட்டின் கவர்னராக அறிவிக்கப்பட்ட வி.என்.ரவிக்கு நாகாலாந்து மாநில அரசு சார்பில் நேற்று (14-09-21) நடைபெற்ற பிரிவு உபசார விழாவை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

வி.என்.ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி ஏற்றத்தில் இருந்து எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை என்றும், பத்திரிகையாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்தவில்லை என எதிர்ப்பு தெரிவித்தும்  (Kohima press club) பத்திரிகையாளர்கள் அரசு சார்பில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவை  புறக்கணித்தனர். இச்சம்பவம் நாகலாந்து அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரஸ் கிளப் தலைவர் ஆலிஸ் யோஷு மாநில செய்தித்தாள்களின் ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தில், " மாறுதலாகி செல்லும் கவர்னர் ஆர்என் ரவிக்கு அதிகாரப்பூர்வ மாநில பிரியாவிடை திட்டத்தை புறக்கணிக்கும் முடிவை கேபிசி ஒருமனதாக எடுத்துள்ளது ... இந்த முன்னோடியில்லாத நடவடிக்கை ரவி தனது இரண்டு வருட பதவியில் எப்படி பத்திரிகை மற்றும் ஊடக சகோதரத்துவத்தை முற்றிலும் அலட்சியமாக நடத்தினார் என்பதை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது 

நாகாலாந்தை தளமாகக் கொண்ட உள்ளூர் மற்றும் தேசிய ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களை ஓரங்கட்டி, பத்திரிகையாளர்கள் பல முறை அணுகிய போதிலும் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ரவி அவர்களை 

தொடர்பு கொள்ள மறுத்ததுடன்  அவர்களை முற்றிலும் அவமதித்தார் என்று யோஷு கூறினார்.

நாகலாந்து விவகாரம் தொடர்பாக ஆளுநர் என்ற வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பிலும் ரவி உரையாற்றவில்லை. நாகாலாந்தை தளமாகக் கொண்ட பத்திரிகை/ஊடகத்தை அவர் முற்றிலும் புறக்கணித்ததன் மூலம், அவர் நாகாலாந்து மக்களுக்கு அவமதிப்பை செய்தார், குறிப்பாக அவரது 'இரட்டை வேடம்' காரணமாக, என அவர் கூறினார்.

"ரவிக்கு முந்தைய ஆளுநர்களின் ஆட்சிக் காலத்தில் ராஜ் பவன் அணுக முடியாததாக ஒரு போதும் இருந்ததில்லை" என்று அவர் கூறினார்.

Previous Post Next Post