சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் கிராமங்கள் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா.!


சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தக வெளியீ்டு விழா கல்லூரியின் நூலகத்தில் நடைபெற்றது கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் துணை தலைவர் சொக்கு வள்ளியப்பா முன்னிலை வகித்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "ஸ்மார்ட் கிராமங்கள்" என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புறையாற்றினார்.

 இந்த புத்தகத்தில் சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா மற்றும் சோனா கல்லூரியின் இயக்குனர் டாக்டர்.நிர்மலேஷ் ,கே.சம்பத்குமார் ஆகியோர் இரண்டு தலைப்புகளில் கட்டுரையை எழுதியுள்ளனர் அவற்றில்

  1. இந்தியா கிராமங்களில் மதிப்பு கூட்டலுக்கான பொருத்தமான தொழில் நுட்பங்கள்

  2.இந்திய கிராமங்களில் பெண்களை மேம்படுத்துவதற்கு பொருத்தமான தொழில் நுட்பத்தை செயல்படுத்துதல்

இதில் பெண்கள், தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நிலையான வழியில் வருமானத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பங்களிக்கும் ஆற்றலை கொண்டு உள்ளனர். கிராமப்புற சமூகங்களில் அவர்களின் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்ட உடன், புதுமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகள் (எஸ்&டி) அவர்களுக்கு பயன்படலாம். கிராமப்புற பெண்கள் தங்கள் சொந்த சமூகங்களுக்குள்ளேயே தங்கியிருந்து வருமானத்தை உருவாக்க உதவுகிறார்கள்.1990களில் விருந்து வேலைவாய்ப்பு பெற்ற பெண் தொழிலாளர்கள் 10 சதவிகிதம் குறைந்து விட்டதாகவும், இன்று 20 சதவிகிதம் பெண்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் மக்கள் தொகையில் 54.6 சதவிகிதம் முதன்மைத் தொழிலாக விவசாயம், 2015-2016 விலையில் அதன் மொத்த மதிப்பில் 17 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இது வளரும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மையமாக இருக்க வேண்டிய ஒரு துறை என்றும். கிராமங்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் கிராமவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஸ்மார்ட் கிராம மாதிரியின் கீழ் சமீபத்திய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திரு சொக்கு வள்ளியப்பா மற்றும் நிர்மலேஷ் கே.சம்பத்குமார் ஆகியோர் முன்மொழிந்தனர்

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தொழில்துறை தீர்வு வல்லுநர்கள், பொது சுகாதார நிபுணர்கள், பொதுக்கொள்கை வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்கள் உட்பட கிராமப்புற திட்டமிடலில் ஆர்வமுள்ள அல்லது செயலில் உள்ள அனைவருக்கும் புத்தகத்தில் உள்ள அறிவுத் தளம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று கல்லூரியின் துணை தலைவர் திரு சொக்கு வள்ளியப்பா தெரிவித்தார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் வீ. கார்த்திகேயன், எஸ். ஆர்.ஆர். செந்தில்குமார் ஜி.எம். காதர் நவாஷ் மற்றும் சோனா கல்லூரியின் இயக்குனர் டாக்டர் நிர்மலா நிர்மலேஷ் கே.சம்பத்குமார், பேராசிரியர் மாலதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post